பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக மா .செ ஆறுதல்
ஆறுதல்
ரெட்டிபாளையம் கிராமத்தில் இரு சமூக மக்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களை பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டிபாளையம் கிராமத்தில் சமீபத்தில் இரு சமூக மக்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் அமைதியான சூழலை நிலை நாட்டும் வகையில் ஆலோசனையும் வழங்கினார் இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் இராஜேந்திரன், நெய்வேலி மேற்கு ஒன்றிய செயலாளர் எழில்செல்வன் மற்றும் ரெட்டிப்பாளையம், நன்னிக்குப்பம் ஆகிய கிராமங்களின் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.
Next Story