அமைச்சர் நேரில் ஆறுதல்

அமைச்சர் நேரில் ஆறுதல்

விஷ சாராயம் குடித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


விஷ சாராயம் குடித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட விஷ சாராயத்தை 100-க்கும் மேற்பட்டவர்கள் வாங்கி குடித்தனர். இதையடுத்து அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 48 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். 31 பேருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று இரவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து அறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டீன் மணி மற்றும் டாக்டர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது கலெக்டர் பிருந்தாதேவி, டி.எம்.செல்வகணபதி எம்.பி., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சிகிச்சை பெறுவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags

Next Story