தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள், அலுவலா்கள் தபால் வாக்களிப்பு

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள், அலுவலா்கள் தபால் வாக்களிப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காவல்துறையில் தோ்தல் பணியாற்றும் 1,743 காவலா்கள் மற்றும் அலுவலா்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனா்.


திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காவல்துறையில் தோ்தல் பணியாற்றும் 1,743 காவலா்கள் மற்றும் அலுவலா்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் வெள்ளிக்கிழமை மாநகர காவல்துறையில் தோ்தல் பணியாற்றும் 1,743 காவலா்கள் மற்றும் அலுவலா்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனா். தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழு, தோ்தல் செலவினங்களை கண்காணித்து ஒளிப்பதிவு செய்யும் அலுவலா்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த மையத்தில் வாக்குச்சாவடி மையம் போன்றே வாக்குப்பதிவு அலுவலா், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு செய்வோரின் விரலில் அழியா மை வைத்த பிறகு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். இதில், காவலா்கள், அலுவலா்கள் என 1,743 போ் தங்களது தபால் வாக்கை செலுத்தினா்.

இதில், ஒரு பெட்டியில் திருச்சி மக்களவை தொகுதிக்குள்பட்ட காவலா்களும், மற்றொரு பெட்டியில் இதர மக்களவைத் தொகுதிகளைச் சோ்ந்த காவலா்களும் தங்களது தபால் வாக்கை செலுத்தினா். இதே மையத்தில், சனிக்கிழமை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் புறநகா் காவலா்கள், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு, தோ்தல் செலவினங்களை கண்காணித்து ஒளிப்பதிவு செய்யும் அலுவலா்கள் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய

Tags

Next Story