விருதுநகர் மாவட்ட எஸ் பியிடம் மனு அளித்த காவலர்கள்

விருதுநகர் மாவட்ட எஸ் பியிடம் மனு அளித்த காவலர்கள்
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்த பொதுமக்கள்
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 12 பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாவை நேரில் சந்தித்து புகார் மனுக்களை அளித்தனர்.

அவற்றைப் பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அப்துல்லா சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்களுக்கு ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.

அதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பணிபுரியும் 33 காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தங்களது குறைகள் குறித்து மனு அளித்தனர்

Tags

Next Story