பாஜக வேட்பாளரை ஆதரித்து தொகுதி அமைப்புச் செயலாளர் பிரச்சாரம்
வாக்கு சேகரிப்பு
கடையநல்லூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து தொகுதி அமைப்புச் செயலாளர் பிரச்சாரம்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் புன்னையாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலையில் தென்காசி பாராளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து தொகுதி அமைப்பாளர் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில மகளிரணி தலைவி வினோலின் நிவேதா, ஒன்றிய தலைவர் தர்மர் மற்றும் கிளை நிர்வாகிகள்உள்ளிட்ட ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Next Story