கட்டுமான பொருட்கள் கண்காட்சி - எம்.எல்.ஏ துவக்கி வைப்பு

கட்டுமான பொருட்கள் கண்காட்சி - எம்.எல்.ஏ துவக்கி வைப்பு

கண்காட்சி

சேலத்தில் நடைபெறும் கட்டுமான பொருட்கள் கண்காட்சியை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சேலம் என்ஜினீயர்ஸ் பீல்டு எக்ஸ்போ என்ற கட்டுமான பொருட்கள் கண்காட்சி சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயகுமார் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. இந்த கண்காட்சியை வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதே வளாகத்தில் சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் அறக்கட்டளை மற்றும் எஸ்.கே.எஸ். ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மருத்துவ முகாமை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் மாவட்ட வன அதிகாரி ஷஷாங் ர.கஷ்யப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கண்காட்சி ஏற்பாடுகளை வழிகாட்டும் குழு தலைவர் எம்.கமல், மருத்துவ முகாம் தலைவர் எம்.ஜே.கேசவன், மற்றும் என்ஜினீயர்கள் செய்து இருந்தனர். இந்த கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் எனவும், கட்டுமானத்துறை தொடர்பான சிமெண்டு, இரும்பு, புதிய வகையிலான கதவு, ஜன்னல்கள், சிமெண்டு ரெடி மிக்ஸ், குழாய்கள், செராமிக்ஸ், உள் அலங்கார சாதனங்கள், மரச்சாமான்கள், சோலார் மின் சாதனங்கள், ஹோம் தியேட்டர், வங்கிககள், ரியல் எஸ்டேட் போன்ற அரங்குகளை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக என்ஜினீயர்ஸ் பில்ட் எக்ஸ்போ தலைவர் எஸ்.சுபாஷ் தெரிவித்தார்.

Tags

Next Story