பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி விறுவிறு

பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி விறுவிறு

ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் தீவிரம்

பாலாறில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளில், ஊராட்சி நிர்வாகத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் திருமுக்கூடல், பழவேரி, பினாயூர், அரும்புலியூர், குருமஞ்சேரி உள்ளிட்ட ஊராட்சிகள் பாலாற்று கரையையொட்டி உள்ளன. இந்த ஊராட்சி கிராமங்களுக்கு பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்து,

குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. சில மாதங்களாக நிலவும் வறட்சி காரணமாக, பாலாற்றில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஊராட்சிகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஆழ்துளை கிணறுகளின் நீரூற்றுகள் வற்றி வருகின்றன. இவ்வாறு திருமுக்கூடல், பழவேரி,

சிறுதாமூர், அரும்புலியூர் ஆகிய ஊராட்சிகளுக்கான பாலாற்று படுகை ஆழ்துளை கிணறுகள் வற்றின. இந்த ஊராட்சிகளில் பாலாற்று படுகையில் நீரூற்றுகள் உள்ள இடம் கண்டறிந்து, அப்பகுதிகளில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளில், ஊராட்சி நிர்வாகத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, திருமுக்கூடல் ஊராட்சி தலைவர் மஞ்சுளா கூறியதாவது: ஏற்கனவே பாலாற்றில் செயல்பாட்டில் இருந்த திருமுக்கூடல் பகுதிக்கான இரண்டு ஆழ்துளை கிணறுகளும் நீரின்றி வற்றின. இதனால், தற்போது பாலாற்றின் மைய பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய் பதித்து வருகிறோம். மே, ஜூன் மாத இறுதி வரை கோடை மழை இல்லாமல், தொடர்ந்து வறட்சி நிலவினால் குடிநீர் பிரச்னையை சமாளிப்பது சவாலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்."

Tags

Next Story