கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி

கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி

பாலம் பணியை துவக்கிய எம் எல் ஏ

கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியினை ராஜேஷ் குமார் எம் எல் எ இன்று தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பாலூர் ஊராட்சிக்குட்பட்ட, செம்மண் கோட்டவிளையிலிருந்து தாமரைதட்டு விளை செல்வதற்கு கால்வாயின் குறுக்கே பாலம் இல்லாததால் பொதுமக்கள் மாற்றுவழிகளில் சென்று வந்தனர். இப்பகுதியில் உள்ள மக்கள் செம்மண் கோட்டவிளையிலிருந்து தாமரைதட்டு விளை செல்வதற்கு கால்வாயின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இப்பகுதியில் பாலம் அமைக்க எம் எல் எ நிதி 4 - லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பாலம் அமைக்கும் பணியினை ராஜேஷ் குமார் எம் எல் எ இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாலூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ் கியூபர்ட் ராஜ், வார்டு உறுப்பினர்கள் பெனட், சுதா, நிர்வாகிகள் ஜெயக்குமார், லிவிங்ஸ்டன், சசிகுமார், பாலூர் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் ஜெயக்குமார் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story