குமரி மலையோர பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணி !

குமரி மலையோர பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணி !

பாலம் அமைக்கும் பணி

கன்னியாகுமரியில் மலையோர பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில், அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட காணி மலைவாழ் பழங்குடியின மக்களின் கோரிக்கையின் பேரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் பங்களிப்பான ரூ.3.3 கோடி மதிப்பில் சாலை பணி , நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2021-2022 -ன் கீழ் ரூ.5 கோடி மதிப்பில் மோதிரமலை முதல் குற்றியார் வரை சுமார் 49.80 மீட்டர் அளவில் பாலம் அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில், அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் (பொ) இளையராஜா, அரசு வழக்கறிஞர் ஜாண்சன், ரெமோன், உதவி பொறியாளர் தனசேகர், உதவி கோட்டப்பொறியாளர் விஜயா, வனத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story