கன்னிகாபுரம் அரசுப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி

கன்னிகாபுரம் அரசுப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி

பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

கன்னிகாபுரம் அரசுப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கன்னிகாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை உள்ள இப்பள்ளியில் ஒரே வகுப்பறை மட்டுமே உள்ளது.

போதிய வகுப்பறை வசதி இல்லாததால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் மாட்டு கொட்டகைகளில் வகுப்புகள் நடத்த வேண்டிய அவல நிலை இருந்ததால் மாணவர்கள் கடும் சிரமப்பட்டனர். எனவே பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தமிழக அரசு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்காக ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி கலந்துகொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மரக்காணம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ஸ்ரீதர், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கண்ணன் மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story