சேலம் அரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி
பூஜையில் கலந்து கொண்ட எம்எல்ஏ
சேலம் அரசு கலைக்கல்லூரியில் ரூ.1¾ கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் காமராஜர் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 80 லட்சத்தில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிக்கான பூமிபூஜை நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இதில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் ரத்தினவேல், மாநகராட்சி பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story