பாலாற்றில் 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணி நடக்கிறது

பாலாற்றில் 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணி நடக்கிறது

பாலாற்றில் 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணி நடப்பதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.  

பாலாற்றில் 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணி நடப்பதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் குடிநீருக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வாக பாலாற்றில் 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருவதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் காங்கேயநல்லூர் முதல் சத்துவாச்சாரி வரை பாலாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.

paalaarஇந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் எ வ வேலு ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்கள். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், காங்கேயநல்லூர் முதல் சத்துவாச்சாரி வரை சுமார் 96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் பாலம் வரும் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். வேலூர் மாவட்டம் சேண்பாக்கம், காங்கேயநல்லூர் ,கழிஞ்சூர், உள்ளிட்ட 5 இடங்களில் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தில் வேளாண்மை . மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு ஏற்பட வழிவகுக்கும். வேலூர் முதல் காட்பாடி வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட துறையினர், வரும் இரண்டு நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags

Next Story