மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் மருத்துவமனை கட்டுமானப் பணி

மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் மருத்துவமனை கட்டுமானப் பணி

 திருப்பூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 90 கோடி மதிப்பில் புற்றுநோய் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

திருப்பூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 90 கோடி மதிப்பில் புற்றுநோய் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.90 கோடி மதிப்பில் புற்றுநோய் மருத்துவமனை கட்டிடடம் கட்டும் பணியை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரோட்டரி சங்கம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.90.00 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், திருப்பூர் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவர் முருகநாதன், பியோ தலைவர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:& தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரோட்டரி சங்கம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.90.00 கோடி மதிப்பீட்டில் அதி நவீன புற்று நோய் சிகிச்சை மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. நமக்கு நாமே திட்டமானது முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது இத்திட்டத்தினை கொண்டு வந்தார். அரசு ஒரு திட்டத்தை கொண்டு வருமானால் அதில் பொதுமக்கள் பங்களிப்பு இருந்தால் அந்த திட்டத்தின் மீது தனி அக்கறை நிச்சியமாக இருக்கும். அந்த உணர்வு இருக்க வேண்டும் என்பது தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நோக்கம் ஆகும்.

மேலும், புற்றுநோய் என்பது இந்த காலக்கட்டத்தில் அதிக அளவில் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றது. இந்த புற்று நோய் மருத்துவமனையானது இந்திய அளவில் ஒரு சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரிடம் இந்த மருத்துவமனையை பற்றி எடுத்துக் கூறினோம். தமிழ்நாடு முதலமைச்சர் இது போன்ற திட்டங்களை தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இந்த மருத்துவமனை தமிழ்நாட்டு மக்களுக்கும் மட்டுமல்லாமல் இங்கே தங்கி வேலை பார்த்து கொண்டிருக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் இந்த புற்று நோய் மருத்துவமனை அமையும். புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவத் தீர்வுக்கான அதிநவீன திட்டத்தை தமிழ்நாடு அரசுடன் இணைந்து தன்னார்வ அமைப்புகள் மூலம் அமைக்கப்படவுள்ளது.

இம்மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் பிரிவு, ஐம்ஆர்டி, ஐஜிஆர்டி, உள்கதிர்வீச்சு மருத்துவம், மருத்துவ புற்றுநோயியல் பிரிவு, அறுவை சிகிச்சை புற்றுநோயியல் பிரிவு, அணு மருத்துவம் முழு உடல் பெட் சிடி ஸ்கேன், இருதய மருத்துவ கேத் லேப் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. மேலும், திருப்பூர் மாவட்டத்தை புற்றுநோய் இல்லாத மாவட்டமாக கொண்டு வர வேண்டும். இந்த மருத்துவமனை அமைய தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.60.00 கோடி நிதியுதவி அளித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருப்பூர் மாவட்ட மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், நிதியுதவிகளை வழங்கிய திருப்பூர் ரோட்டரி சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம், லயன்ஸ் அமைப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மருத்துவமனை சிறப்பான மருத்துவமனையாக அமைய முழு ஒத்துழைப்பை வழங்கிய அனைவரும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாநகராட்சி, வார்டு.56 சந்திராபுரத்தில் சங்க இலக்கிய பூங்கா இடத்தில் மரம் நடும் பணியினை துவக்கி வைத்தார்.

மேலும் இப்பூங்காவில் சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, தொல்காப்பியம், பட்டினப்பாலை, புறநானூறு, திருக்குறள் உள்ளிட்ட 50 புத்தகங்களில் உள்ள 150 தாவரங்களை அடையாளம் கண்டு அவற்றின் நாற்றுக்களை நடவு செய்யும் பணி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு-.நாகராசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், துணை தலைவர் திருப்பூர் ரோட்டரி பொதுநல அறக்கட்டளை அ.கார்த்திகேயன், வெற்றி அறக்கட்டளை தலைவர் கோப£லகிருஷ்ணன், செயலாளர் சிவராமன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, இளங்குமரன், சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story