சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - ஒன்றிய சேர்மன் ஆய்வு
ஆய்வு
கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் மாதாகோவில் தெருவில் வடிகால் வசதியுடன் புதிய சாலை அமைக்கும் பணி கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிமென்ட் சாலை, வடிகால் மற்றும் குடிநீர் குழாய் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story