வாய்க்கால் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி

வாய்க்கால் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி
 மயிலத்தில் வாய்க்கால் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
மயிலத்தில் வாய்க்கால் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டையில் இருந்து மயிலம் வழியாக புதுச்சேரி வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த 2 வழிச்சாலையை வெள்ளிமேடுபேட்டை- தழுதாளி வரை 4 வழிபாதையாக மாற்ற ரூ.126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது, அதன் ஒருபகுதியாக மயிலம் ஊராட்சிக்குட்பட்ட கடைவீதி பகுதியில் சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

அப்போது வாய்க்கால் மற்றும் உயரமாக தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள கடைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்படும். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக் கள் மற்றும் வணிகர்கள் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்கு மாரை சந்தித்து, கடைகளுக்கு பொதுமக்கள் சென்று வர ஏதுவாக வாய்க்கால், தடுப்புச்சுவரை தாழ்வாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர், அதன் அடிப்படையில் சிவக்குமார் எம்.எல்.ஏ. மயிலம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வடிகால் வாய்க்கால், தடுப்புச்சுவர் பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், பணியில் இருந்த நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் கவிதாவிடம் வணிகர்களும், பொதுமக்களும் பாதிக்காத வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும் வாய்க்கால், தடுப் புச்சுவரை தாழ்வாக அமைக்குமாறு வலியுறுத்தினார். ஆய்வின் போது வணிகர் சங்க நிர்வாகிகள் தங்கராசு, மூர்த்தி, ராம்குமார், பா.ம.க. நிர்வாகிகள் செங்கேணி, நந்தகோபால் கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், அய்யனார், பாலு ஆட்டோ தேசிங்கு, தன்ராஜ் தனசேகர், முத்துகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story