குடிநீா் வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் தொடக்கம்

குடிநீா் வசதிகள் ஏற்படுத்தும் பணிகள்  தொடக்கம்
பைல் படம்
அம்ரூத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சிகளில் ரூ.89 கோடியில் குடிநீா் வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 23 பேரூராட்சிகள் உள்ளன. இதில் அம்ரூத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நிலக்கோட்டை, சித்தையன்கோட்டை பேரூராட்சிகளில் புதிய குடிநீா் குழாய்கள், மேல்நிலைத் தொட்டிகள், தொட்டிகள் அமைக்க கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, நிலக்கோட்டை பேரூராட்சியில் ரூ.37.16 கோடியிலும், சித்தையன்கோட்டை பேரூராட்சியில் ரூ.16 கோடியிலும் கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதன் தொடா்ச்சியாக நடப்பாண்டில், வத்தலகுண்டு பேரூராட்சியில் குடிநீா் வசதிகளை மேம்படுத்த ரூ.35.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

Tags

Next Story