படியூர் அருகே இலவச குடியிருப்புக்கு மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்
பணிகள் தீவிரம்
படியூர் ஒட்டங்காடு பகுதியில் இலவச குடியிருப்புக்கு மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த படியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒட்டங்காடு பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு குடியிருக்க வீடுகள் இல்லாத சுமார் 95 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனைகளை பட்டாக்கள் வழங்கியது.
இதனை அடுத்து இப்பகுதியில் வீடுகள் கட்டி மின்சார வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் குடும்பங்களின் கோரிக்கை இருந்து வந்தது. இதனை அடுத்து காங்கேயம் மின்வாரிய அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை நேற்று காலை ஒட்டங்காடு பகுதியில் இலவச வீட்டுமனையில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு மின்கம்பங்களை அமைத்து வருகின்றன.
Next Story