வடக்குத்து: புதிய போர்வெல் அமைக்கும் பணி
புதிய போர்வெல் அமைக்கும் பணி
கடலூர் மாவட்டம், வடக்குத்து பகுதியில் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு புதிய போர்வெல் அமைக்கும் பணி தொடங்கியது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து கிராமத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் வசதி பற்றாக்குறை உள்ளதால் சடாமுனி கோவில் அருகில் போர்வெல் அமைக்கும் பணியை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story