அணியாபரநல்லூரில் ரூ.46 கோடியில் புதிய பால் பண்ணை கட்டிட பணி: ஆட்சியர் ஆய்வு

அணியாபரநல்லூரில் ரூ.46 கோடியில் புதிய பால் பண்ணை கட்டிட பணி: ஆட்சியர் ஆய்வு
X

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

அணியாபரநல்லூரில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பால் பண்ணை கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் அணியாபரநல்லூரில் ரூ.46 கோடி மதீப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய பால்பண்ணை கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பால்பண்ணையில் முழு கொள்ளளவையும் பயன்படுத்துவதற்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும், பால் உற்பத்தியை 50,000 லிட்டராக உயர்த்துவதற்கு உரிய பால் உற்பத்திக்கான கள நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும்,

புதிய பால்பண்ணைக்கான பணிகள் முடிவடைவதற்கு முன்பு, பால் விற்பனை மற்றும் பால் உபபொருட்கள் விற்பனைக்கான பார்லர்கள் மற்றும் மினி ஹைடெக் பார்லர் அமைத்து, விற்பனை அதிகரிக்க உரிய நவடிக்கைகள் எடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

Tags

Next Story