செஞ்சி அருகே புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டும் பணி

செஞ்சி அருகே புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டும் பணி

பூமி பூஜை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் வேலந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பனங்காடு கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நார்சாம்பட்டு கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு மற்றும் வஸ்திரம் புரவடை கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா அந்தந்த கிராமங்களில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் அன்னம்மாள் ஆப்பரகாம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயானா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பனங்காடு கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார், அதைத்தொடர்ந்து அவர், நார்சாம்பட்டில் ரூ.12 லட்சத்து 50 ஆயி ரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர ரேஷன் கடை கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

Tags

Next Story