ரூ.33 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்கம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், ரூ.33 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்கம்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கொள்ளுக்காடு ஊராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ், ஆண்டிவயல்-கோரைக்குடி சாலை, ரூ.33 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன், ஒன்றியப் பொறியாளர் மணிமேகலை, ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதா ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சாமியப்பன், திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் புதுப்பட்டினம் சாகுல், ஒப்பந்ததாரர் வீரையன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.