சிவதாபுரம் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

சிவதாபுரம் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

சிவதாபுரம் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. அருள் நேரில் ஆய்வு செய்தார்.


சிவதாபுரம் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. அருள் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 22-வது வார்டு சிவதாபுரம் பகுதியில் சிறு மழை பெய்தாலும் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள், மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என்று அருள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மழைநீர் கால்வாய் அமைத்து கொடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். தொடர்ந்து செஞ்சிக்கோட்டை பகுதிக்கு ரூ.6 கோடியும், சிவதாபுரம் பகுதிக்கு ரூ.8 கோடியும் நிதி பெற்று தற்போது மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி தரமற்ற முறையிலும், காலதாமதமாகவும் நடைபெறுவதாக புகார் வந்தது. இதனால் அப்பகுதியில் வடிகால் அமைக்கும் பணியை அருள் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது ஒப்பந்ததாரரிடம் முறையாக பணியை மேற்கொள்ள வேண்டும், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் செஞ்சிக்கோட்டை பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை செய்ய விடாமல் தடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஓடையை விரைந்து கையகப்படுத்தி தர வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். .

Tags

Next Story