இராவுத்தநல்லூரில் நியாயவிலை கடை கட்டடம் அமைக்கும் பணி துவக்கம்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராவுத்தநல்லூர் பகுதியில் பகுதிநேர நியாயவிலை கடை கட்டடம் அமைக்கும் பணி துவங்கியது.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராவுத்தநல்லூர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி இராவுத்தநல்லூர் பகுதியில் பகுதிநேர நியாயவிலை கடை கட்டிடம் அமைத்து தர வேண்டி மனு அளித்திருந்தனர்... அதனை தொடர்ந்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹9.13 லட்சம் நிதி ஒதுக்கி அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி இராவுத்தநல்லூர் பகுதியில் பகுதிநேர நியாயவிலை கடை பகுதியில் கட்டிடம் அமைக்கும் பணி மேற்கொள்ள அதற்கான பூமி பூஜை நடைபெற்றது... இதில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமாரவேல் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்..
Read MoreRead Less
Next Story