ரூ.1.50 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி - துவக்கி வைப்பு
தார் சாலை அமைக்கும் பணி
திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டு கே.என்.எஸ்.நகர் 2, 3, 4, 5 ஆகிய வீதிகள் மற்றும் காமாட்சி அம்மன்நகர் 1, 2, 3, 4, 5&வது மெயின்வீதி மற்றும் 1, 2, 5, குறுக்கு வீதிகளில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது. இதனை திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ. மற்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், கவுன்சிலர் சுபத்ரா தேவி ஆனந்தன்,பகுதி செயலாளர் முருகசாமி, வார்டு செயலாளர்கள் சீனிவாசன், முத்துக்குமாரசாமி, தி.மு.க. நிர்வாகி சிவபாலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags
Next Story