செஞ்சி அருகே ரூ.1.5 கோடியில் பாலம் கட்டும் பணி அதிகாரி ஆய்வு

செஞ்சி அருகே ரூ.1.5 கோடியில் பாலம் கட்டும் பணி அதிகாரி ஆய்வு

பணிகளை ஆய்வு செய்த அதிகாரி

செஞ்சி அருகே ரூ.1.5 கோடியில் பாலம் கட்டும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் செஞ்சி பகுதி யில் பல்வேறு சாலை மற்றும் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் செஞ்சி அடுத்த சாத்தம்பாடி-கப்ளாம் பாடி சாலையில் சாத்தாம்பாடி அருகே ரூ.1 கோடியே 49 லட்சம் மதிப்பில் பெரிய ஏரி வாய்க்காலை கடந்த செல்ல ஏதுவாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது

. இப்பணியை நெடுஞ்சாலைத் துறை செஞ்சி உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது இளநிலை பொறியாளர் சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story