கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி - எம்.எல்.ஏ ஆய்வு

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி - எம்.எல்.ஏ ஆய்வு

எம்.எல்.ஏ ஆய்வு 

திருச்செங்கோடு திருநகர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை ஈஸ்வரன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு திருநகர் காலனியில் 30 ஆண்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ரூ36 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

சங்ககிரி சாலையில் உள்ள திருநகர் காலனியில் பாதி குடியிருப்புகள் திருச்செங்கோடு கழு நகராட்சி எல்லையிலும், மறுபாதி கருவேப்பம் பட்டி ஊராட்சி எல்லையிலும் வருகின்றன. திருநகர் காலனியில் சுமார் 450 வீடுகளும், அதனையொட் டியுள்ள இந்திரா நகரில் சுமார் 320 வீடுகளும் உள் என அப்பகுதி தாழ்வாக இருப்பதால் மழை நீர், சாக்கடை கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கியவாறு, சுகாதார சீர்கேடு அபாயம் உருவானது.

தற்போது, நமக்கு நாமே திட்டத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது,அந்த பணிகளை எம் எல் ஏ ஈஸ்வரன் ஆய்வு செய்தார் எம் எல் ஏ ஈஸ்வரன் கூறுகையில், 'ஊர் மக்களின் பங்களிப் போடு இந்த பணி நடந்து வருகிறது. நகராட்சி எல்லையிலும், ஊராட்சி எல்லையிலுமாக குடியிருப்பு கள் நெருக்கமாக உள்ளன. திருச்செங்கோட்டை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். அப்படி தரம் உயர்த்தப்பட்டால் ஊராட்சி எல்லைகள் நக ராட்சியில் சேரும்' என்றார். நிகழ்ச்சியில், கொம தேக மாவட்ட தலைவர் சேன்யோகுமார். மாநில இளைஞரணி ராயல் செந்தில்,சிக்கநாய் கன்பாளையம் ஊராட்சி தலைவர் கோபால், கரு வேப்பம்பட்டி ஊராட்சி உறுப்பினர் ராஜம்மாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Tags

Next Story