அதிநவீன தானியங்கி மழை அளவு கருவிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்

சங்ககிரியில் அதிநவீன தானியங்கி மழை அளவு கருவிகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 இடங்களில் வருவாய்த்துறையின் சார்பில் நவீன தானியங்கி மழை அளவு கருவிகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவினை துல்லியமாக அறியும் வகையில் வருவாய்த்துறையின் சார்பில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளி வளாகம், கத்தேரி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகம், கோனேரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே, கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகேயும் உள்ளிட்ட நான்கு இடங்களில் நவீன தானியங்கி மழை அளவு கருவிகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

Tags

Next Story