தாத்தியம்பட்டியில் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்
பைல் படம்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா தாத்தியம்பட்டியில் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 43லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தாத்தியம்பட்டியில் இருந்து முத்தாலம்மன் கோயில் வரை தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா அதிமுக ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் விக்னேஷ், ஓமலூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எஸ்எஸ்கேஆர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், நிர்வாகிகள் தளபதி, புளியம்பட்டி செந்தில்குமார், ஆறுமுகம், முனுசாமி ஒப்பந்ததாரர்கள் திருமுருகன், ராமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.