வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி: தமிழக அரசு உறுதி

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி: தமிழக அரசு உறுதி

வள்ளலார் தேசிய மையம்

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்துவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்துவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகள் மே 10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பெ

ருவெளி பகுதியான 71 ஏக்கரில் 3 ஏக்கர் பரப்பில் மட்டுமே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தொல்லியல் துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தொன்மையான கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அது பாதுகாக்கப்படும் என்று,

தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெருவெளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்றும், வழக்கு தொடர்ந்தவர் பாஜக அரசியல் கட்சியை சார்ந்தவர், உள் நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருப்பதாக வாதம் தமிழக அரசு வாதம் செய்துள்ளது.

Tags

Next Story