அனுமதி இன்றி கட்டடம் கட்டினால் கடும் நடவடிக்கை!

அனுமதி இன்றி கட்டடம் கட்டினால்  கடும் நடவடிக்கை!

மாவட்ட ஆட்சியர் 

நீலகிரியில் அனுமதி இன்றி கட்டடம் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கட்டுமான பணிகள் நடந்தால் உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டுவதற்கு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக கட்டுமான சங்க பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஊட்டி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் அருணா கூறியதாவது, நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களை கட்டும்போது உரிய அனுமதியின்றி பொதுமக்கள் யாரும் கட்டடம் கட்ட வேண்டாம். உரிய அனுமதியின்றி நிலஅபிவிருத்தி பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டாம்.

இந்நிலையில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நேற்று ஏற்பட்ட அசம்பாவிதங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் தடுப்பு சுவர் கட்டும் பணிக்கு மண் அள்ளும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டதும்

இந்த பணிக்கு தேவையான பாதுகாப்பு வசதி ஏதும் ஏற்படுத்தப்படாமலும் பணிக்கு ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பணி மேற்கொள்ளப்பட்டதும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்தது. எனவே இதுபோன்ற நிகழ்வுகளை இனிவரும் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் தவிர்த்திடும் பொருட்டு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏதுமின்றி எவ்வித பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம். மேலும இதை முறையாக கண்காணிக்க சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றாமல் இதுபோன்று பாதுகாப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பணிகளை மேற்கொள்ளும் கட்டட உரிமையாளர்கள், சம்மந்தப்பட்ட பொறியாளர்கள், கனரக இயந்திர உரிமையாளர்கள, ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். .

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், கூடுதல் ஆட்சியர் கவுசிக், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன் மற்றும் கட்டுமான சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story