ஆணைமங்கலம் விளாம்பாக்கம் இடையே பாலம் கட்டுமான பணி துவக்கம்

ஆணைமங்கலம் விளாம்பாக்கம் இடையே ரூ. 11.76 கோடியில் புதிய பாலம் கட்டுமான பணி துவங்கியுள்ளது.

ஆணைமங்கலம் விளாம்பாக்கத்திடையே ரூ. 11.76 கோடியில் புதிய பாலம் கட்டுமான பணி தொடக்கம். நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சி விளாம்பாக்கம் கிராமத்திற்கு கீழ்வேளூரில் இருந்து ஆணைமங்கலம் கிராமத்தில் இருந்து வெட்டாற்றை கடந்து செல்ல கிராம மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஓடம்(சிறிய போட்) பயன்படுத்தி வந்தனர். ஓடம் பழுது ஏற்பட்டதால் ஆற்றில் தண்ணீரில் இறங்கி ஆற்றை கடந்து வந்தனர். ணூடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் முதலை இருப்பதாக விளாம்பாக்கம் கிராம மக்கள் அச்சத்தில் இருந்தனர். இதனால் ஆற்றை கடந்து செல்ல அச்சப்பட்டனர்.

இதையடுத்து கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த மதிவாணன் முயற்சியால் தற்காலிகமாக மரப்பாலம் அமைக்கப்பட்டது. இந் நிலையில் மரப்பாலமும் சேதம் ஏற்பட்டிருந்த நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் ஆணைமங்கலம், விளாம்பாக்கம் இடையே வெட்டாற்றின் குறுக்கே ரூ.11.76 கோடி மதிப்பில் பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பாலம் கட்டும் பணியை நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன், கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜித்சிங், கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி ஆகியோர் புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்து பாலம் கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கோவிந்தராசன், கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனியப்பன், ஒக்கூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமாலா ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, சபஸ்தியம்மாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாண்டியன், கோபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story