சேலத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை

சேலத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

சேலத்தில் கணவன் மனைவி தகராற்றால் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் , கிச்சிப்பாளையம், நேதாஜி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 28), கட்டிட தொழிலாளி. இவர் பாத்திமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கணவருடன் கோபித்து கொண்டு பாத்திமா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சரவணனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story