மேட்டூரில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மேட்டூரில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மேட்டூரில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சேலம் ஜில்லா கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ,மேட்டூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக சேலம் ஜில்லா கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேட்டூர் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக ரூபாய் 5000 வழங்க வேண்டும்,

கட்டுமான நல வாரிய கூட்டம் முடிவின்படி ஓய்வூதியம் ரூபாய் 2000 க்கான அரசாணை வெளியிட வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சிமெண்ட் மணல் செங்கல் இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ,மாவட்டம் தோறும் அரசு மணல் குவாரிகளை அமைத்து மணல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும், கட்டுமான தொழிலை தொழிலாளர்கள் நல வாரியத்தை சீரழிக்க கூடாது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story