கட்டுமான தொழிலாளர்கள் சங்க கோரிக்கை மாநாடு

கட்டுமான தொழிலாளர்கள் சங்க கோரிக்கை மாநாடு

 மாநாடு

கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சங்க கோரிக்கை மாநாடு.
கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மாநாடு நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜி வரவேற்றார். கம்பி, சிமெண்ட், எம்.சாண்ட் மற்றும் மணல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். கல்வி உதவி தொகையை 1ம் வகுப்பில் இருந்து வழங்க வேண்டும். திருமண உதவி தொகையினை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இயற்கை மரண உதவி தொகையை 2 லட்சமாக உயர்த்த வேண்டும். விபத்துகளில் இறக்கும் தொழிலாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடந்தது. மாநில பொதுச்செயலாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story