கட்டுமான தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

கட்டுமான தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
மாநில பொதுக்குழு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில் தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் குமார் தலைமையில் கடப்பேரி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் தொழிற்சங்க வளர்ச்சிப் பணிக்கு மாநில மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் உருவாக்குதல் எனவும், தொழிற் சங்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களை புதிய பொறுப்பாளர்களாக நியமனம் செய்வது என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர்கள் தனிநபர் அட்டை வழங்கி கட்டுமான மற்றும் அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு பெற கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஒப்புதல் பெறுவதை முழுமையாக தடை செய்ய வேண்டும், மழைக்கால நிவாரணம் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூபாய் ஐயாயிரம் கட்டுமான வாதத்தில் இருந்து தர வேண்டும், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நகர்ப்புறத்தில் இரண்டு சென்ட், கிராமப்புறத்தில் 5 சென்ட் குடிசை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தர வேண்டும், தீபாவளி பண்டிகை போனசாக தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூபாய் 8000 அரசின் கட்டுமான வாரிய எதிர்ப்பு நிதியிலிருந்து வழங்க வேண்டும் என என 18 முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ராஜசேகர், மாநில பொருளாளர் ஜான் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story