தென்காசியில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி தனி நாடாளுமன்ற தொகுதிக்கு 19. 04. 2024 அன்று நடைபெற வுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் காவல் துறை பார்வையாளர் பங்கஜ் நைன் பாராளுமன்ற தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இன்றி நடக்க ஒத்துழைப்பு வழங்கு மாறு கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா தெரிவித்ததாவது, தேர்தல் நடத்தை தொடர்பான புகார் மற்றும் கருத்துக்களை தென்காசி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-8375 வாயிலாகவும்,
வாக்காளர் உதவி மைய எண் 1950 என்ற எண்ணிலும் தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள cVIGIZL என்ற செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.
இக்கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் சதீஷ் குருமூர்த்தி, சித்திக் முகமது அமீர், முகமது இக்பால், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
