பழநி கோவில் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
பழநி கோவில் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு செய்யவேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று பழனி திருக்கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பழனி கோட்டாட்சியர் சரவணன், பழனி கோவில் இணைஆணையர் மாரிமுத்து, காவல்துறை உயரதிகாரிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் ஒரு கண்துடைப்பு நாடகத்தையே அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.
யாருக்குமே தகவல் தெரிவிக்காமல் ஆலோசனை கூட்டம் எதற்காக நடத்த வேண்டும். கண்துடைப்பு நாடகம் நடத்த முடிவு செய்து, அதிகாரிகள் அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டியுள்ளனர்.பழனி வரும் பக்தர்களின் நிலைதான் பரிதாபத்திற்கு உரிய நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story