தோகைமலையில் ஆலோசனைக் கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வேட்பாளராக அறிவிப்பு செய்த பிறகு, அவரவர் தொகுதியில், வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பிரச்சாரம் போன்ற யுக்திகளை கையாண்டு வருகின்றனர் இதன் அடிப்படையில் பெரம்பலூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர், தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதியில் உள்ள தோகைமலையில் நேற்று இரவு நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளான பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன்,பாமக மாவட்ட செயலாளர் ரமேஷ், மற்றும் ஐ ஜே கே கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு உரையாற்றிய பாரிவேந்தர், திமுகவும் மோடி அரசும் ஜென்ம எதிரிகளாக உள்ளனர். நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் பிரதமர் மோடியை வசைப்பாடி வருவார்கள். இதனால் திமுக எம் பி களுக்கு எப்படி நல்லது செய்வார்கள்? என கேள்வி எழுப்பிய அவர், நான் கடந்த முறை அவர்களது கூட்டணியில் வெற்றி பெற்றாலும், நட்பு அடிப்படையில் பிரதமர் மோடியுடன் கொண்ட உறவால், எனது தொகுதிக்கு தேவையான திட்டங்களை செய்து கொடுக்க இசைவு கொடுத்தார். அதன் அடிப்படையில் செய்த திட்டங்கள் குறித்து இன்று புத்தகமாக அச்சிட்டு உங்களிடம் கொடுத்துள்ளேன்.
இதுவரை தொகுதியில் மூன்று மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. பல பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளது. தொகுதிக்கு புதிய ரயில்வே புத்தகங்களை கொண்டு வருவது உள்ளிட்ட எண்ணத்தை திட்டங்களை செய்துள்ளேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர்,மக்களிடம் வசூலித்த வரிப்பணத்தில் கொள்ளையடித்து தேர்தலுக்கு முதல் நாள் இரவு ரூ.500, 1000 என கொடுப்பார்கள். ஆனால், இது அவர்கள் பணம் அல்ல. அது உங்கள் பணம் என்றார்.