திருப்பூர் த.மா.க அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
வருகின்ற டிசம்பர் 28 -ந் தேதி தமாகா தலைவர் ஜி கே வாசன் எம்பி பிறந்தநாளை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகம் மூப்பனார் பவனில் மாவட்ட தலைவர் எஸ்.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகரத்தில் சாலை வசதி சரிவரை குப்பை எடுக்காமலும் கொசு மருந்து அடிக்காமலும் இருப்பதை கண்டித்து ஜனவரி மாதம் மாநகராட்சி அருகில் மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது 2024 நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டி அமைப்பதை பற்றி இக்கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டது.
ஜி.கே.வாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 28 தேதி அன்று காலை 8:30 மணி அளவில் ரயில்வே ஸ்டேஷன் பத்திரகாளி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது .மதியம் 12 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 3000 பேருக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் வி. கே. செழியன், ஈஸ்வரமூர்த்தி,அப்துல் கலாம் ஆசாத்,நடராஜ்,மூத்த நிர்வாகி ஜெயமுத்துசாமி,மாவட்ட தொழிற்சங்க தலைவர் தனசேகர்,பொதுச் செயலாளர் பூபதி ,ஹரி,தண்டபாணி ,கருப்பையா செயலாளர்கள் சேதுராம் வேல்முருகன் டிவிசன் நிர்வாகிகள் சீமா கண்ணன்,சுதாகர்,கணேஷ் ,விஜய், வடக்கு வட்டார துணைதலைவர் முத்துசாமி,மகளிர் அணி கலைமணி மற்றும் சாம்அமிர்தபாபு நடராஜ் கேசவன் அலுவலக பொறுப்பாளர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.