தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
கலந்தாய்வு கூட்டம்
தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அலுவலர்களுடான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26.03.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பறக்கும் படையினர் மூலமாக எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கேட்டறியப்பட்டது. செலவின பொறுப்பாளர்கள் தினமும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து அறிக்கை தயார் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் குழுவினர் கன்னியாகுமரி பாராளுமன்றம் பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பத்திரிக்கை, தொலைக்காட்சி உள்ளிட்டவைகள் வாயிலாக விளம்பரபடுத்துவதை கண்காணித்து, அவற்றிற்கான கட்டணத்தொகையினை அந்தந்த வேட்பாளர்களின் செலவினத்தில் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அந்தந்த கண்காணிப்பு அலுவலர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story