வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை கூட்டம்

X
வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை கூட்டம்
குமாரபாளையத்தில் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. குமாரபாளையத்தில் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது.
நவ. 4,5, மற்றும் நவ. 18,19 ஆகிய சனி, ஞாயிறுகளில், ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் ஆகியவை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், பொதுமக்களுக்கு உதவிட கோரியும் அறிவுறுத்தப்பட்டது. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.
Next Story
