திருப்பூரில் கருத்து கேட்பு கூட்டம்

திருப்பூரில் கருத்து கேட்பு கூட்டம்

திருப்பூரில் தொழில் வளம் பங்களிப்போர் அமைப்பின் கருத்து கேட்பு கூட்டம் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது.


திருப்பூரில் தொழில் வளம் பங்களிப்போர் அமைப்பின் கருத்து கேட்பு கூட்டம் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது.
திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பின் கருத்துகேட்பு கூட்டம் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது. திருப்பூர் அப்பாச்சிநகரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பின் சார்பாக, தொழிலாளர், தொழிலாளர் நலன், தொழில் சூழல் மற்றும் தொழிற்சாலைகளில் நிலைத்தன்மை அடைவதற்கான முயற்சியில் சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்க, திருப்பூர் தொழில்துறையின் நிலைத்தன்மை ஆலோசகர்கள், உறுப்பினர் நிறுவனங்களின் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் இளங்கோவன் வரவேற்று பேசினார். சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் ராம்குமார் ராமசாமி, இணைச்செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் பேசினர். இந்த கூட்டத்தில் வங்கதேச பனியன் வர்த்தகம் தொடர்பாகவும், தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியின் மண்டல அலுவலகம் திருப்பூரில் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிர்வாகத்திற்கான வழிமுறைகள், தணிக்கையின் போது தேவையில்லா குறிப்பிடுகளை தவிர்ப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியம், திருநாவுக்கரசு, தீபக் சேத்தா, குமார் மற்றும் பலர் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story