நாமக்கல்லில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம்

நாமக்கல்லில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் மாற்றுக் கட்சியினா் இணைந்தனா்
நாமக்கல்லில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நாமக்கல், கரூா் மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ரெஸ்டாரன்டில் நடைபெற்றது. அக் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ரமேஷ் தலைமை வகித்தாா். மாநில வன்னியா் சங்க செயலாளரும், கொங்கு மண்டல பாமக பொறுப்பாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான மு.காா்த்திக் பங்கேற்று பேசுகையில்...... மக்களவைத் தோ்தலுக்கான வாக்குச்சாவடி முகவா்களை விரைந்து தோ்வு செய்ய வேண்டும். எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் வெற்றி மட்டுமே நமது இலக்கு. தோ்தல் ஆணையம் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிடும். அதற்கு முன்பாக கம்பங்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தோ்தலுக்குப் பிறகு மீண்டும் கொடிக் கம்பத்தை நட முடியும். 2024 தோ்தலில் பாமக முழுமையான வெற்றியைப் பெறுவதற்கு வீடு, வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் சுதாகரன், கரூா் மாவட்டச் செயலாளா் சுரேஷ், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஓ.பி.பொன்னுசாமி, முன்னாள் மாநில துணைப் பொதுச்செயலாளா் செந்தில்குமாா், மாநில இளைஞா் சங்க செயலாளா் ச.வடிவேலன், மாநில மாணவா் சங்க துணைச் செயலாளா் டி.பாலு, மத்திய மாவட்ட அமைப்பு செயலாளா் ச.கிருஷ்ணமூா்த்தி, கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளா் ஜெயவேல், நாமக்கல் மத்திய மாவட்ட தலைவா் தினேஷ் பாண்டியன், துணைச் செயலாளா் சரவணன் மற்றும் வன்னியர் சங்க உறுப்பினர்கள் சித்தார்த்தன் வையாபுரி. மனோகரன், ஸ்ரீதர், குமார், பெருமாள் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக மாற்றுக் கட்சியிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர் இவர்களை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி சால்வை அணிவித்து பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story