காளிப்பட்டியில் ரேசன்கடை பணியாளர்கள் ஆலோசனை கூட்டம்

காளிப்பட்டியில் ரேசன்கடை பணியாளர்கள் ஆலோசனை கூட்டம்
X

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பணியாளர்கள்

காளிப்பட்டியில் தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் ஆலோசனை செய்த கூட்டம் நடந்தது.

ரேசன்கடை பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம். காளிப்பட்டியில் ரேசன்கடை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மல்லசமுத்திரம் அருகேயுள்ள, காளிப்பட்டியில் நேற்று, தமிழ்நாடு அரசு ரேசன்கடை பணியாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம் மாநில இணைச்செயலாளர் சாமிநாதன் தலைமையில் நடந்தது.

மாவட்ட தலைவர் ரவி வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். இதில், ஜன.5ல் ஈரோட்டில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும். தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதி கூறியபடி ரேசன் கடைகளுக்கு தனித்துறையை விரைந்து ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான 20சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். கார்டு ஒன்றுக்கு 10சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அனைத்து ரேசன்கடைகளுக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்திதர வேண்டும். ஒருசில பணியாளர்களுக்கு சம்பளம் காலதாமதாக வந்துகொண்டுள்ளது அதை சரிசெய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story