மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை கூட்டம்

மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் தலா 3 பேரின் பெயர்களைப் பரிந்துரை செய்து நேற்று வாக்களித்தனர். விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், டெல்லியில் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் டாக்டர் வேதா, விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கனின் அண்ணன் ஜவஹர் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்த கருத்துக் கணிப்புக்கூட்டம் விருதுநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

விருதுநகர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் தேர்வு கருத்துக் கணிப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர். இக்கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தலைமை வகித்தார். மதுரை பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் நாகராஜன், விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளதால் விருதுநகர், மதுரை மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளரைத் தேர்வு செய்யும் வகையில் ஒவ்வொருவரும் 3 வேட்பாளர்களின் பெயர்களை எழுதி வாக்குப் பெட்டியில் செலுத் தும் வகையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் தலா 3 பேரை வேட்பாளர்களாகப் பரிந்துரை செய்து வாக்களித்தனர். பெரும்பான்மையான வாக்குகள் பெறும் நபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags

Next Story