வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்....
ஆட்சியா் ச.அருண்ராஜ்
வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். வாக்குச் சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சரிவு பாதை வசதி மின்விசிறி, பழுதடைந்த கதவு மற்றும் ஜன்னல் மாற்றம் செய்தல், குடிநீா் வசதி, தரைதளம் சரி செய்தல் மற்றும் ஆதிதிராவிடா் பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் தேவைப்படும் வசதிகள் குறித்தும், நகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், செங்கல்பட்டு தொகுதி-443, செய்யூா் தொகுதி -263, மதுராந்தகம் தொகுதி-274,சோழிங்கநல்லுா் தொகுதி-663, தாம்பரம் தொகுதி-427, பல்லாவரம் தொகுதி-437, திருப்போரூா்தொகுதி-330 ஆகிய வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. அவற்றில், மின்விளக்கு, மின்விசிறி போன்றஅடிப்படை வசதிகளை செய்யுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். குடிநீா், கழிப்பறை வசதிகள், மூன்று சக்கர நாற்காலிகள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தனியாா் பள்ளி வாக்குச்சாவடிகளில் நகராட்சி மூலம் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Next Story