ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக இராமநாதபுரம் குமரய்யா கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தனியார் மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருவாடானை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட பொறுப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான இராம. கருமாணிக்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜாராம்பாண்டியன், செல்லதுரை அப்துல்லா, பாரிராஜன், ஜோதிபாலன், சரவண காந்தி, குமார், மாநில பொறுப்பாளர் அடையாறு பாஸ்கரன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் வேல்சாமி, மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தியா கூட்டணியின் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நவாஸ்கனி எம்.பி பங்கேற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து மிகக் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியத்தை பற்றியும், கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கான யுக்திகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதற்கான குழுக்களை ஏற்படுத்துவது பற்றியும்,

நகர்ப்புறங்களிலும் தெருவாரியாக பிரச்சார குழுக்களை ஏற்படுத்துவது பற்றியும் ஆலோசனை செய்து அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து பேசிய நவாஸ் கனி காங்கிரஸ் கட்சி உருவாக்கிய இந்தியாவை தற்போது அழத்துக் கொண்டிருக்கிறது பாஜக தொடர்ந்து அடுத்த முறையும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை அழித்து விடுவார்கள் எனவும் பேசினார்.

அதனோடு மட்டுமில்லாமல் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் நான்கு சட்டமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தொகுதி, எனவே அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி துணை நிற்கும்.

அதே போன்று ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நவாஸ் கனியாகிய என்னை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடந்த தேர்தலை போன்று ஆதரவு தெரிவித்து ஏணி சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் மத்தியிலும் மாநிலத்திலும் நமது கூட்டணி ஆட்சி அமைந்திட கட்சி தொண்டர்கள் பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து பேசினார்.

மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் கிரீன் இப்ராஹிம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் ராமநாதபுரம் நகர தலைவர் கோபி நன்றி கூறினார் வட்டார தலைவர்கள் திருப்புல்லாணி சேது பாண்டியன் ராமநாதபுரம் காருகுடி சேகர் முன்னாள் ராணுவ வீரர் அணி கோபால் உள்ளிட்ட கலந்து கொண்டனர்

Tags

Next Story