மாவட்ட காங்., மனித உரிமை துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம்
மனித உரிமை ஆலோசனை கூட்டம்
கள்ளகுறிச்சி மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில், மாவட்ட காங்., மனித உரிமை துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரகோத்தமன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா, துணைத் தலைவர் முத்தமிழ்செல்வி, இளைஞர் காங்., விஜய்ராஜ் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்கள் காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், மாநில இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பேசினர். காங்., நிர்வாகிகள் ராஜ்மோகன், கலியமூர்த்தி, செல்வராஜ், மாதேஷ்வரன், சரண்ராஜ், திருமலை, மணிகண்டன், பாக்கியராஜ், சரவணன், சங்கர், குமார், கவுன்சிலர் தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் வரும் லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story