தேனியில் தேர்தல் பணிகளின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

தேனியில் தேர்தல் பணிகளின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 வாக்குப்பதிவு முன்னேற்பாடு பணிகள் மற்றும் பிற தேர்தல் பணிகளின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1225 வாக்குச்சாவடி மையங்களில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 231 பதட்டமான வாக்குச்சாவடிகள் உட்பட 884 வாக்குச்சாவடி மையங்களில் நேரடி கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு,

72 சதவீதம் வாக்குச்சாவடி மையங்கள் நேரடி கண்காணிப்பு கேமிரா (Web Camera) மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று, வாக்காளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் குறிப்பாக வெயில்,

மழை போன்ற பருவநிலை மாற்றங்களை சமாளிப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் வங்கி பண பரிவர்த்தனைகளையும், UPI பண பரிவர்த்தனையும், ரூபாய் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட பணப்பரிமாற்றங்களை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இதேபோன்று,

காவல் துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள வாகன சோதனைச்சாவடி மையங்களில் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபடவும், மாநில எல்லைகளில் கண்காணிப்பை அதிகப்படுத்தவும், பறக்கும் படை (Flying Squad), நிலையான கண்காணிப்புக் குழு (SST), வீடியோ கண்காணிப்புக் குழு (Video Surveillance Team) ஆகியவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள், தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவும்,

டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் மற்றும் மொத்தம் சில்லரை விற்பனைகளை கண்காணித்திட அறிவுறுத்தினார்கள். தேர்தல் விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்களின்றி கைப்பற்றப்படும் அனைத்து விதமான பரிசுப்பொருட்களும், பணம் மற்றும் இதரபொருட்களையும் உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், 24x7 என்ற அடிப்படையில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் மற்றும் c-Vigil App மூலம் பெறப்படும் புகார்கள் ஆகியவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் தேர்தலை நியாயமாகவும், சுமூகமாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என சிறப்பு செலவின பார்வையாளர் திரு. பி.ஆர்.பாலகிருஷ்ணன், I.R.S., (IT) (Rtd), தெரிவித்தார்

Tags

Next Story