2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தயாரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தயாரிப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தயாரிப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
இன்று (19.01.2024) தலைமைச் செயலகத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசு நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் , அரசு செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஜோதி நிர்மலாசாமி, வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வணிகர் சங்க பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story